2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இருளில் மூழ்கிய வீதி

எப். முபாரக்   / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தக்கியா வீதி, பல மாதங்களாக வீதி விளக்கின்றி இருளில் மூழ்கி உள்ளது. 5 வீதி விளக்குகள் ஒளிர்ந்த அந்த வீதி, தற்போது எந்தவொரு விளக்கும் ஒளிராத நிலையில் இருளில் மூழ்கியுள்ளது.

இரவு நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்கையில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தற்போது மழைக்காலம் ஆதலால் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாகவும் அண்மைக்காலமாக திருடர்கள் நடமாட்டமும் அதிகரித்துக் காணப்படுவதாகவும், பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

எனவே, மேற்படி வீதி விளக்குகளை மாற்றி, பழுதுகளைத் திருத்தி ஒளிரச் செய்வதில்,  திருகோணமலை  நகர சபை கவனம் எடுத்தல் வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X