Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ மங்களபுர காட்டுப் பகுதியில் யானையொன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இறந்திருந்திருந்தது.
குறித்த யானையை பரிசோதனை செய்வதற்காக மிருக வைத்தியர் வருகை தந்து பிரேத பரிசோதனை செய்வதற்கான உடல் பாகங்களை இன்று (16) காலை எடுத்துச் சென்றனர்.
அத்தோடு, இறந்த யானையினது ஏனைய உடல் பாகங்கள் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அவ்விடத்திலே புதைக்கப்பட்டன.
இவ் யானையின் உடல் பாகத்தில் காயங்கள் காணப்படுவதோடு இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
40 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago