Editorial / 2018 டிசெம்பர் 22 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், ஹஸ்பர் ஏ ஹலீம்
கடந்த கால வன்செயல்களின் போது காலம் காலமாக வாழ்ந்திருந்த மூதூர் நகர தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த தமிழ் கிராமம் இறால்குழி என்பது நினைவிலிருந்து அகன்று விடலாகாது, இச்சம்பவத்தை அனுபவித்தவன் என்ற வகையில் குறிப்பிடுகிறேன் என நேற்று (20) இறால்குழி மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த நிகழ்வில், நிதியத்தின் தலைவர் கனகசபை தேவகடாட்சம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருபுறம் கடல்வளமும் மறுபுறம் மகாவலிகங்கை நீர்வளமும் அமைந்த வளமான கிராமம் தற்போது, பூர்வீக நிலங்களும் அபகரிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாது இலங்கையின் மிகப்பெரிய மண் கொள்ளை நடைபெறும் கேந்திர நிலையமாகவும் இறால்குழி கிராமம் மாறியுள்ளது வேதனைக்குறிய விடயமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையை மாற்றுவதற்கு எந்த அரசியல் தலைமைகளும் முன்வருவதற்கு ஆயத்தமில்லை, இதனால் எமது தாய் மண் நிலம் என்ற கோட்பாட்டில், இதனை பாதுகாக்க இங்குள்ள இளைஞர்கள் கல்வியால் உயர் நிலைக்கு வரவேண்டும் என்றார்.
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago