2025 மே 03, சனிக்கிழமை

‘இறைச்சிக்கடைகளை மூடுவதற்கான உத்தரவு சட்டவிரோதமானது’

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம், எப்.முபாரக்

விலங்கறுமனைகள்,  இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடுவதற்கான உத்தரவானது, சட்டவிரோதமானதென, கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுல்பிகார் அபூபக்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கையொன்றை, இன்று (28) அவர் வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், “கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும்  அதன் காரணமாக மாடுகள் அதிகளவில் இறப்பதாகவும் எனவே, விலங்கறுமனைக​ளையும் இறைச்சிக்கடைகளையும் மூடி விடுமாறு, கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகள் உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக, எமது திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு விலங்கறுமனைக​ளையும் இறைச்சிக்கடைகளையும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடி விடுமாறு மூடும் அதிகாரம், சுகாதார வைத்திய அதிகாரிக்கோ, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கோ எந்தவித சட்டத்தின் கீழும் வழங்கப்படவில்லை.

அவர்களால் வழங்கப்பட்டுள்ள மேற்படி உத்தரவானது, சட்டவிரோதமானதும் எனது அதிகாரத்தை மீறும் செயல்” என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X