Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 19 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
2015/2016ஆம் கல்வி ஆண்டில் இருந்து பல்கலைக்கழக நுழைவுக்காக மாணவர்கள் தெரிவு செய்த கற்கை நெறிக்கு இணையத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இலத்திரனியல் விண்ணப்பப்படிவம் அனுப்பும் முறையைப் பின்பற்றும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு சகல பாடசாலை அதிபர்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மொஹான் ரீ சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (19) சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
'மாணவர்கள் இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்கும் போது காகித விண்ணப்பங்களைச் செயன்முறைப்படுத்துவதில் இழக்கப்படுகின்ற நேரங்களை குறைப்பதுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெட்டுப்புள்ளிகளை விரைவாக வெளியிடுவதற்கும் உதவுகின்றது.
கடந்த ஆண்டிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணையத்தளம் மூலம் பல்கலைக்கழக அனுமாதிக்கான விண்ணப்பங்கள் கோரி வருகின்றது. மாணவர்களுக்கு இந்த விடயத்தை மேலும் விழிப்பூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதனால் 2015/2016ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இலத்திரனியல் விண்ணப்படிவங்களை தங்கள் பாடசாலையின் கணினி ஆய்வு கூடத்தில் இணையத்தள வசதியை ஏற்படுத்தி, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் உதவியுடன், 2015ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான இலத்திரனியல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு உதவுமாறு கேட்கப்படுகின்றீர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உங்கள் பாடசாலையில் இணையத்தள வசதி இல்லாவிடின், திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் அல்லது கல்வி அமைச்சின் கீழான மாகாண மற்றும் வலய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வலயங்கள் அல்லது 2015/2016 ஆம் கல்வி ஆண்டுக்கான அனுமதிக் கையேட்டின் இணைப்பு Eஇல் குறிப்பிடப்பட்டுள்ள நெனசல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்கள் ஆகியவற்றுக்கு செல்லுமாறு மாணவர்;களுக்கு அறிவுறுத்தவும்.
2015ஆம் ஆண்டில் க.பொ.த.உயர் தரப் பரீட்சைக்குத் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தித் தோற்றிய மாணவர்கள் மாத்திரம் இவ்விலத்திரனியல் விண்ணப்பப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.
இலத்திரனியல் விண்ணப்பப் படிவங்களையும் மேலதிக விவரங்களையும் www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
22 May 2025