2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இலவச இரத்த பரிசோதனையும் நுளம்பு வலை வழங்கலும்

Princiya Dixci   / 2017 மார்ச் 18 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச இரத்தப் பரிசோதனை முகாம், கிண்ணியாவின் பல்வேறு இடங்களில் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

கிண்ணியா தள வைத்திய சாலை மற்றும் கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி, கிண்ணியா ரீ.பி.ஜாயா வித்தியாலயம் மற்றும் கிண்ணியா  பிரதேச சபை அலுவலகம் போன்ற இடங்களில் இப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு பரிசோதனைகள் மூலம் டெங்கு நோய் காணப்பட்டவர்களுக்கு, இலவசமாக நுளம்பு வலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந் நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இப் பரிசோதனை முகம், அல்-ஹிக்மா மற்றும் அன்னூர் நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X