Niroshini / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா கல்வி வலயத்தில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் விவசாயப் பாடத்தில் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய பாட இலவச முன்னோடிக் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை காலை கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மகருப் கலையரங்கில் இடம்பெற்றது.
கிண்ணியா கல்வி வலய விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிண்ணியா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசுவர்கான் கலந்து கொண்டார்.
இக் கருத்தரங்கு நாளை செவ்வாய்க்கிழமையும் இடம்பெறவுள்ளது.
இதில், கிண்ணியா வலயத்துக்குட்பட்ட சுமார் 23 பாடசாலைகளிலிருந்து 200 மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

49 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago