2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இலவச வைத்திய முகாம்

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - மொரவெவ ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச வைத்திய முகாம், இன்று (22)  வைத்தியசாலை மண்டபத்தில் வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் போல் ரொஷான் தலைமையில் இடம்பெற்றது. 

"தந்தை வழியில் நானும்" எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த இலவச வைத்திய முகாமில், பொது மருத்துவ நிபுணர் டொக்டர் பீ. கனேகபாகு, திருகோணமலை பொது வைத்தியசாலை புற்றுநோய் மருத்துவ நிபுணர் பீ. சசிகலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மொரவெவ பிரதேசத்தில், அதிகளவிலான மக்கள் நோய்களை கண்டறியாமல் வறுமையை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை கேள்வியுற்ற டொக்டர் போல் ரொஷான், கிராமத்திலுள்ள சமூக அக்கறையுள்ளவர்களை இணங்கண்டு, அவர்களின் மூலமாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை இணங்கண்டு அவர்களுக்கு இலவச வைத்திய சேவை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, 250க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தமது நோய்களை பரிசோதித்து சிகிச்சைகளை பெற்றுகொண்டனர். 

இவ்வாறான வைத்திய முகாம், வைத்தியரொருவரினால் இப்பிரதேசத்தில்  இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது தடவையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .