Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
பதினாறு வயது சிறுமியான காதலியை அழைத்துச் சென்று தனது உறவினர் வீட்டில் வைத்திருந்த 19 வயது இளைஞனைத் தாக்கிய, சிறுமியின் உறவினர்கள் மூவரையும், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே, திங்கட்கிழமை (14) உத்தரவிட்டார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கே.மகேஸ்வரன் (வயது 50), ஜே.என்.சந்திரக்குமார் (வயது 36), கே.டோரன்ஸ் (வயது 30) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞன், நீண்ட காலமாக சிறுமியைக் காதலித்து வந்ததாகவும் அதற்கு சிறுமியின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும், இதனால் திருமணம் முடிக்கும் எண்ணத்தில் சிறுமியை அழைத்துச் சென்று தனது உறவினர் வீட்டில் வைத்திருந்த நிலையில், சிறுமியின் உறவினர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மூர்க்கத்தனமான இத்தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபர்கள் மூவரையும், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago