2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் பிரச்சினைகள் கலந்துரையாடல்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட அரச சார ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் என்.ரவிச்சந்திரன் தலைமையில், திருகோணமலை சர்வோதய நிலயத்தில் நேற்று (13) நடைபெற்றது.

இந்தச் செயலமர்வு, இளைஞர் அபிவிருத்தி அகத்தின் இளைஞர் திட்டப் பிரிவு   மற்றும் மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தனின் நெறிப்படுத்தலில், 20 பேர் வரை இதில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர், மூவின சமூகத்தையும் சார்ந்த புத்திஜீவிகள், மத குருமார்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X