Princiya Dixci / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44ஆவது நினைவேந்தலையொட்டி, தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனால், இளையோரை ஊக்குவிக்கும் முகமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு, அவருடைய இல்லத்தில் நேற்று (26) நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்,
“நாட்டில் அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்தார்.
“நாங்களும் அவரது கொள்கைகளுக்கமையவே கடந்த 70 வருடங்களாக பயணித்து வருகின்றோம். அதிகளவான கட்சிகள் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன.
“அந்தவகையில், நாமும் அவைகளை அடையக்கூடிய நிலையிலேயே தற்போது இருக்கின்றோம். சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
“எதிர்வரும் காலங்களிலும் எங்களது இலக்கில் இருந்து விலகாமல், சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்பதன் ஊடாக மாத்திரமே நாம் வெற்றியடைய முடியும்” என்றார்.
7 hours ago
9 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 Nov 2025