2025 மே 01, வியாழக்கிழமை

ஈச்சலம்பெற்று பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுமக்களின் நலன்கருதி, திருகோணமலை, வெருகல்,  ஈச்ச்சலம்பெற்று பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு, வெருகல்  பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈசலம்பற்று பிரதேச மக்கள், பொலிஸ் நிலைய சேவையை நாடி பல கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள சேருவில பிரதேசத்துக்குச் செல்லவேண்டி இருப்பதால், இப்பிரதேசத்திலேயே பொலிஸ் நிலையமொன்றை அமைத்துத்தரும்படி, அப்பகுதி மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம்  வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கினங்க, இப்பகுதியில் பொலிஸ் நிலையமொன்றை அமைக்க பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி, இதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும் நேற்று (26) நடைபெற்ற வெருகல் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில்  இம்ரான் எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .