தீஷான் அஹமட் / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடும்பு இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி, பாரதிபுரத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதிபதி எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.
குறித்த நபர், சேருநுவர பொலிஸாரால் நேற்று (29) கைதுசெய்யப்பட்டு, கைதுசெய்து செய்யப்பட்டு, மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட ஒரு தொகை உடும்பு இறைச்சியை குறித்த நபர் வைத்திருப்பதாக சேருநுவர பொலிஸருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவரின் வீட்டைச் சோதனைக்கு உட்படுத்திய போது, உடும்பு இறைச்சி கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .