2026 மார்ச் 25, புதன்கிழமை

உணவகங்கள் மூடப்பட்டன

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள  இரண்டு உணவகங்கள்  சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று வியாழக்கிழமை மூடப்பட்டுள்ளன.

இந்த உணவகங்களில் சுகாதாரம் மந்தகதியில்  காணப்பட்ட நிலையில் சுகாதாரத்தை பேணுமாறு உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இருந்தபோதிலும், சுகாதாரம் சீராக்கம் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே இந்த உணவகங்களை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் பணித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு உணவகங்களும்  மூடப்பட்டன. இம்மாதம் இந்த இரண்டு உணவகங்களுக்கும் 20,000 ரூபாய், 35,000 ரூபாய் தண்டம்  நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .