Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.நௌபர்
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீரீன், 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து பொது அமைப்புகளுக்கு வழங்கவென கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு, மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் தலைமையில், மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (16) நடைபெற்றது.
இதன் பிரகாரம், மூதூர் - நடுத்தீவு மஸ்ஜிதுல் ரஜ்மானியா ஜும்மா பள்ளிவாசலுக்கு ஒரு தொகுதித் தளபாடங்களும் மூதூர் மத்திய அகதியாவுக்கு ஒருதொகுதி தளபாடங்கள், மூதூர் இஸ்லாமிக் சென்டர் நிறுவனத்துக்கான தளபாடம் என்பனவும் இதன்போது கையளிக்கப்பட்டன.
மூதூர் மத்ரஸத்துல் ஹன்சில் குர்ஆன் மத்ரஸாவுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கனிணி உபகரணத் தொகுதிகள், மூதூர் பளீலியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான 60.000 ரூபாய் பெறுமதியான காணணி உபகரணங்களும் இதன்போது கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றை கையளித்தார். மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப், திட்டமிடல் பணிப்பாளர் அரபாத் ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago