2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உபகரணங்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் , ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டதிலுள்ள 11 பிரதேச செயலகப் பிரிவில் இருந்தும் 150  மாற்றுத்திறனாளிகளுக்கு, கிண்ணியா, எகுதார் வித்தியாலய மண்டபத்தில் இன்று (11) வழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும்  திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து இதனை வழங்கின.

கிழக்கு மாகாண சுகதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் , கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என்.தர்சினி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X