Freelancer / 2021 ஜூலை 17 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஒலுமுதீன் கியாஸ் , ஏ.எம்.கீத்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர், இன்று (17) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
வில் வெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் றிஸ்வி (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உப்பாறு கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் கூடுகளில் மீன்களைச் சேகரிக்கச் சென்ற மீனவர்களால், சடலம் அவதானிக்கப்பட்டு தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

55 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
7 hours ago