Gavitha / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நஹீம் முஹம்மட் புஹாரி
கடந்த 2000ஆம் ஆண்டு, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 26 பேரின் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (01) மாலை 3.30 மணியளவில் மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
2000.10.02ஆம் திகதி மூதூர் கலாசார மண்டபத்துக்கு முன்னால் இடம் பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்துக்கும் திருகோணமலையில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்குமே இந்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மூதூர் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள், சமூக தொண்டு நிறுவனங்கள், விவசாய சங்கங்கள், பள்ளிவாயல்கள், மத்ரசாக்கள் போன்றவற்றுக்கு தளபாடங்கள், கணனணி உபகரணங்கள் போன்றனவும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
14 minute ago
17 minute ago
29 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
29 minute ago
39 minute ago