2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உயர்ஸ்தானிகர் திருமலை விஜயம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்த்தானிகர் சரா ஹல்ட்டன் ஒபே, திருகோணமலை மாவட்டப்  பதில் அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜாவை நேற்று (10) மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கல்வி, பொருளாதாரம், காணி, மீள்குடியேற்றம் உட்பட மாவட்டத்தின் முக்கிய துறைசார் அபிவிருத்தி, அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தவுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி இதன்போது மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சந்திப்பில், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபனும் உடனிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .