Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2021 ஜூலை 02 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் சமூக இடைவெளி பேணாமலும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (02) தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பயணத்தடையின் பின்னர் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் மக்கள் ஒன்று கூடுவதால் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதோடு கொவிட்-19 தொற்று மரணங்களும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 160 கொவிட்-19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இவை கடந்த தினங்களோடு ஒப்பிடும் போது அதிகரித்த எண்ணிக்கையாக காணப்படுவதாகவும் கூறினார்.
கொவிட்-19 இரண்டாவது அலையில் 26 பேரும், மூன்றாவது அலையில் 246 பேரும் மரணமடைந்துள்ளனர் எனவும் கிழக்கு மாகாணத்தில் 15,267 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மக்கள் அரசாங்கத்தினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காமல் புறக்கணித்து வருவதால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணம் பாரிய ஒரு ஆபத்தான நிலையை ஏதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 May 2025
12 May 2025