2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘உற்பத்திப் பொருட்களில் தமிழ் புறக்கணிப்பு’

Princiya Dixci   / 2021 ஜூன் 13 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

பொன்டெரா நிறுவனத்தின் சில உற்பத்திகளில் தமிழ் மொழி தவறவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதையடுத்து, தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்குவதாக அந்நிறுவனத்தின் உயர்மட்டம் உறுதி வழங்கியுள்ளதாக மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களில் அம்மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

“எனினும், சில உற்பத்திப் பொருட்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

“குறிப்பாக, நியூசிலாந்தை தலைமையகமாகக் கொண்டு இலங்கையிலும் கிளையைக் கொண்டு இயங்கிவரும் பொன்டெரா நிறுவன உற்பத்திப் பொருட்கள் சிலவற்றில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் முன்னுரிமைப் படுத்தப்பட்டு, தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.

“இது தொடர்பாக, பொன்டெரா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலமான கோரிக்கையை, கடந்த 10ஆம் திகதி நாம்  அனுப்பியிருந்தோம். இது தொடப்பாக சாதகமான பதிலை சம்பந்தப்பட்ட நிறுவனம் எமக்கு மறுநாளே (11) அனுப்பியுள்ளது.

“அதில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக தாம் மேற்கொள்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X