2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உள்ளூர் போக்குவரத்து பொறிமுறை ஆராய்வு

Princiya Dixci   / 2022 ஜூலை 03 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எதிர்நோக்குகின்ற போக்குவரத்து பிரச்சினையை ஓரளவு சீர்செய்யும் நோக்கத்தில், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் நேற்று (02) மாலை  கலந்துரையாடல் இடம்பெற்றது.

நோயாளர்களை பார்வையிடுவதற்காக வருகின்ற பொதுமக்களுக்கு பஸ் சேவையை ஒழுங்குபடுத்தல், உரிய நேரத்துக்கு பாடசாலை மாணவர்களுக்கு பஸ் சேவையை வழங்குதல், பஸ் நிறுத்துமிடத்தில் ஏற்படும் இடர்பாடுகளை போக்குவரத்துப் பொலிஸாரின் உதவியைக் கொண்டு சீர் செய்தல் மற்றும் இலங்கத் துறைமுகத்துவாரத்தில் இருந்து வருகின்ற பஸ்களை தோப்பூர் பிரதேசத்தின் ஊடாக வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில், வலயக் கல்விக் பணிப்பாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மூதூர் போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துச் சேவையின் நேரக்காப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .