2025 ஜூலை 02, புதன்கிழமை

உழவு இயந்திரம் புரண்டதில் இளைஞன் பலி

Editorial   / 2017 நவம்பர் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர், நேற்று (10) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரத்தைச் சேர்ந்த கடுக்காமுனை கிராம சேவையாளரான திருமதி காளிப்பிள்ளை    ஸ்ரீஸ்கந்தராஜா என்பரின் மகன்  பஜிர்வன் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

வயல் உழுதுவிட்டு, உழவு இயந்திரத்தைக் கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்துக்குள் இறக்கிய போது, உழவு இயந்திரம் புரண்டதாகவும் அதில் இருந்த வீலுக்குள் சிக்குண்டமையால் இளைஞன் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

இளைஞனின் சடலம், ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை, சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .