2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதற்காக “ஊடகவியலாளர்களின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வு, எதிர்வரும்வரும் 01ஆம் திகதி திருகோணமலை ஜக்அப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் செயலாளருமான என்.ஏ.ஏ.புஸ்பகுமார இன்று (10) சகல ஊடகவியலாளா்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அறிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான உட்பட பலர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில், பங்குபற்றுதல் அல்லது பங்குபற்றாமை தொடர்பாக தெரியப்படுத்துவதற்கு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் 077-8926338 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .