2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், பொன்ஆனந்தம்

மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மது உற்பத்தி நிலையம் சம்பந்தமாக செய்தி சேகரிக்கச்  சென்ற ஊடகவியலாளர்கள்  மீது தாக்குதல் நடத்தியமையை, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது தொடர்பாக, குறித்த சங்கத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னைய அரசாங்கத்தின் ஊடகம் மீதான மோசமான அடக்குமுறை இல்லது போக வேண்டும் என்றும் நல்லாட்சி ஒன்றின் தேவை அவசியம் என்ற ஒரு காலகட்டத்தில் நல்லாட்சியின் பங்குதாரர்களில் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

ஆனால், இன்று இந்த நல்லாட்சியிலும் ஊடகர்களை தாக்கும் சண்டியர்கள் உருவாக்கியிருப்பதுதான் இன்றுள்ள வேதனை தரத்தக்க விடயமாகவுள்ளது.

நாட்டில் இன்று  பரவலாக போதைவஸ்துப் பாவனைகள் அதிகரித்திருப்பதும் போதைவஸ்துக் கடத்தல்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாவதும் பலியாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு எதிரான இந்தச் செயற்பாடுகள் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கையில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களில் மூன்றில்  ஒரு பகுதியினர் மதுசார பாவனை புகைத்தலில்  தமது வருமானத்தை செலவிடுகின்றனர். சுகாதார செலவுகளில் 22 சதவீதத்துக்கும் அதிகமான பணம் மதுசாரம் புகைத்தல் பழக்கத்தினால் நோயுற்றவர்களுக்கு செலவு செய்யப்படுகின்றது என சுகாதார திணைக்களம் புள்ளிவிவரத்தை வெளியிடுகின்றது.

அதேவேளை மாணவர்கள் போதைவஸ்து  பழக்கதுக்குள் உட்பட்டு விடக்கூடாதென மேன்தகு பாடசாலை என்ற திட்டத்துக்குள் பண ஒதுக்கீடு செய்து, இப்போதை பழக்கங்களை இல்லாமல் செய்ய முயற்சிக்கும் வேளை மறுபுறத்தே, இவ்வாறன மது உற்பத்தி நிலையங்களுக்கு சலுகை காட்டுபவர்களாக இருப்பது தான் சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

எனவே, ஊடக சுதந்திரத்துக்கு குந்தகமாகச் செயற்படும் இந்தச் சண்டியர்களை, அரசு கண்டும் காணாமல் விடுவது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியாது.

இவை நீடிக்குமாக இருந்தால் ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்கி தங்களின் நீதியைப் பெற வேண்டி ஏற்படும்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X