2025 ஜூலை 24, வியாழக்கிழமை

ஊடகவியலாளரால் முறைப்பாடு

Thipaan   / 2016 நவம்பர் 16 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடைகளை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தன்னைத் தாக்க முற்பட்டதாகவும் அச்சுறுத்தியதாகவும் ஊடகவியலாளரொருவர், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில், இன்றுபுதன்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நீதிமன்ற வீதியில் வசித்து வரும் ஏ.எம்.கீத் என்பவரே முறைப்பாடு செய்துள்ளார். அந்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

'கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார பிரதிப் பணிப்பாளர் ஏ.லதாஹரன் தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், செவ்வாய்க்கிழமை (15) ஹோட்டல்களைச் சோதனை செய்தனர்.

சோதனை செய்யும் போது அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போதே ஹோட்டலில் வேலை செய்த ஊழியர்கள் தாக்குதல் நடாத்த முற்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை (15) இரவு ஊடகவியலாளரின் வீட்டின் கதவை இனந்தெரியாத சிலர் தாக்கியதாகவும் பக்கத்து வீட்டார் மின்குமிழை ஒளிரச்செய்தவுடன், குறித்த நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்' என, பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது,

'இவ்விடயம் தொடர்பான நடவடிக்கை, தொடர்ந்தும் எவ்வித தொய்வம் இன்றி எடுக்கப்படும். குறித்த உணவகங்களின் உரிமையாளர்கள், எழுத்து மூலமாகத் தெரிவித்த விடயங்களை மீறியுள்ளனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக எமது மேல் மட்டத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய எமது நடவடிக்கையை தொடர்ச்சியாக எவ்வித பின்னடைவும் இன்றி மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .