Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 பெப்ரவரி 13 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வானாறு, ஆயிலியடி கிராமங்களுக்குள் நேற்று(12) இரவு புகுந்த காட்டு யானைகளால் சொத்துக்களுக்கு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சுமார் 3 - 5 யானைகள் ஊருக்குள் புகுந்து பேக்கரி உற்பத்திப் பொருட்களை உண்டதோடு அதன் உபகரணங்களை வெளியில் எடுத்து வீசி உள்ளது.
இதனால் பேக்கரி உரிமையாளர்கள் தாம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.
இதனை அடுத்து சுமார் நூறு தென்னை மரங்கள் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் சுமார் 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைச் செய்கை காணிக்குள் புகுந்து சுமார் இரண்டு ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்லை அழித்துள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்
அத்துடன் கடை ஒன்றுக்குள் வைக்கப்பட்டுள்ள வாழைக்குலைகளை சாப்பிட்டுள்ளதோடு, சிறு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கடைக்காரர் கூறினார்
இரவில் தூங்க முடியாது பயமாக உள்ளதாகவும், யானைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்
36 minute ago
46 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
46 minute ago
59 minute ago
3 hours ago