2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் மானியத்தில் மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 நவம்பர் 01 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியத்தில் மோசடி செய்த சந்தேகநபரொருவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,

திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வந்த பெர்ணான்டோ, நேற்றுத் திங்கட்கிழமை (31) உத்தரவிட்டார்.

காத்தான்குடி பிரதேசத்தைச்சேர்ந்த எம்.எம்.நிஸாம் (65வயது) எனன்பவரே குற்றத் தடுப்பு பிரிவினரால், கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குறித்தநபர், மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியத்துக்கான  2,619,750 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், பொதுச் சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ், நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்க முடியாதெனவும்,  பினை மனுக்கோரலை மேல்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

எரிபொருள் மானியம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .