2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

எருமையுடன் மோதி விபத்து; இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனை வீதியில் வைத்து, இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நின்ற எருமையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(16) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில், மல்லிகைத்தீவு, மணற்சேனை பகுதியைச் சேர்ந்த குமரகுருபரன் தனுஷ்கரன் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில், எருமையும், ஸ்தலத்திலேயே உயிரிழந்ததெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஐே.எம்.நூறுல்லாஹ், மரண விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மரணத்தில் சந்தேகம் இல்லாமையால் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .