2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எல்லை நிர்ணயத்துக்கு எதிராக தீர்மானம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை நகராட்சி மன்றத்தை மாநகர சபையாக தரமுயர்த்தும் போது,  எல்லை பிரிப்பில், சபையில் பல தசாப்தங்களாக இணைக்கபட்டிருந்த அன்புவழிபுரம் வட்டாரம், பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் இணைக்கபட்டமையை எதிர்த்து, திருகோணமலை நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

சபையின் தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில், நேற்று முன்தினம் (20) நடைபெற்ற 54ஆவது மாதாந்த சபை அமர்வின் போது, அன்புவழிபுரம் வட்டார உறுப்பினர் வடமலை ராஜ்குமார் கொண்டு வந்த விசேட பிரேரணையின் மூலமாக இத்தீர்மானம் நிறைவேற்றபட்டது.

அவர் தனது பிரேரணையில், “இலங்கை ஜனநாயக சோலிச குடியரசின் வரத்தமானி பிரகடனத்தின் படி, திருகோணமலை நகராட்சி மன்றம் 20.03.2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் மாநகர சபையாக கடந்த 05ஆம் தரமுயர்த்தபட்டுள்ளது.

“இதன் எல்லை நிர்ணயத்தின் போது,  நகரசபை ஆரம்பிக்கப் பட்ட காலம் முதல் சபையோடு இணைந்திருந்த  முதலாம் வட்டாரமான அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையில் இருந்து பிரிக்கபட்டு, பட்டனமும் சூழலும் பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட சதியாக நாம் கருதுகின்றோம்.

“நகர சபையாக இருக்கும் தமது பிரதேசம் மாநகர சபையாக தரமுயரும் போது, பிரதேசத்தின் அபிவிருத்தி வரி செலுத்தவோருக்கான வரப்பிரசாரங்கள், அவர்களின் ஆதனங்களின் பெருமதி உயர்வு என்று மகிழ்ச்சியில் இருந்த மக்களை பின்தள்ளி, ஒரு பிரதேச சபை எல்லைக்குள் இணைப்பதன் மூலம் தரத்தில் பின்தள்ளும் இந்தச் செயற்பாட்டை பிரதேச மக்களின் சார்பில் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்” என்றார்.

இந்தத் தீர்மானத்தை முன்னாள் நகராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி செல்வராஜா (சுப்ரா) வழிமொழிந்து, தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீரமானத்துக்கு ஆதரவாக உப தவிசாளர் காளிராசா கோகுல்ராஜ், உறுப்பினர்களான லோ.கனகேஸ்வரன், த.கௌரிமுகுந்தன், க.ஜெயபிரகாஷ் மற்றும் பி.டபிள்யூ சுசந்தஜெயலத் ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .