Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
ஐக்கிய தேசிய கட்சியின் சேருவில தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் அருண சிறிசேனவைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு, மொறவெவ பிரதேசத்தில் இன்று (05) நடைபெற்றது.
மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சாலிய ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, மொறவெவ, மஹதிவுல்வெவ, தெவனிபியவர மற்றும் ரொட்டவெவ பகுதிகளிலும் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தொகுதியில் இரண்டு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 30ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், சேருவில அமைப்பாளராக டொக்டர் அருண சிறிசேன நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக டொக்டர் அருண சிறிசேனவை நியமித்தமைக்காக ரணில் விக்கிரமசிங்கவுக்கு, மொறவெவ பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சேருவில தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்திருந்த நிலையில், அமைப்பாளர் ஒருவரை நியமிததமை ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வெற்றியாகும் எனவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், கௌரவிக்கப்பட்டு பாராட்டைப்பெற்ற சேருவில தொகுதி அமைப்பாளர் டொக்டர் அருண சிறிசேன, “நாம் அனைவரும் ஒன்றிணைந்து மொறவெவ பிரதேச சபையைக் கைப்பற்றுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

33 minute ago
44 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
51 minute ago
1 hours ago