Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
'காணி அமைச்சினூடாக நாட்டில் குறுகிய காலத்தில் ஒன்றரை இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னமும் வழங்க இருக்கின்றோம்' என காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்;தன தெரிவித்தார்.
கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையில் கேட்போர் கூடத்தில் நில அளவை உதவியாளர் பதவிக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளது. அமைச்சர்கள் சுயாதீனமாக தங்களது சேவைகளை வழங்குவதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று அரச தொழில்கள் பெறுவோர் சிறந்த நம்பிக்கையான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் இலஞ்ச ஊழல்களை மேற்கொண்டால் உடனடியாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்படுவர்' என்றார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago