2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ஒரே நாளில் இரண்டு விபத்துக்கள்: 7 பேர் காயம்

Gavitha   / 2016 ஜூன் 20 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வௌ;வேறு விபத்துக்கள் காரணமாக, 7 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் -குளியாபிட்டி பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பஸ்ஸொன்றில் சுற்றுலா வந்தவர்கள், திருகோணமலை கடற்கரைப் பகுதியில் பஸ்ஸை நிறுத்தி விட்டு, அதிலொரு குடும்பத்தினர் மாத்திரம் முச்சக்கரவண்டி மூலம் திருகோனேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றுள்ளனர்.

எனினும் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, முச்சக்கரவண்டி குடை சாய்தத்தில் அதில் பயணித்த ஐவரும் முச்சக்கரவண்டி சாரதியும் பாடுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதியான, திருகோணமலை-சினேக் லேன் -எம்.கபிதன், குருநாகல்- குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த எம்.சுறங்க (வயது 38), அவரது மனைவி எஸ்.சந்திரிக்கா (வயது 36), பிள்ளைகளான எஸ்.திரசிலு (வயது 06), எஸ்.தேவிகா (வயது 11) மற்றும் 07 மாத் குழந்தையான எஸ்.ஹதீஸா ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை-மின்சார நிலைய வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை, மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், அவ்வழியே சென்ற வயோதிபப் பெண்ணொருவரை மோதியதில், குறித்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்களில் ஓட்டுநரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த கே.தவமணி (81 வயது) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும் இந்த விபத்துக்கள் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .