2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒரே நாளில் சேவைகள்

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், "சேவய அப்பியாச " திட்டத்தின் கீழ், அரச உத்தியோகத்தர்களை, பொதுமக்கள் சந்தித்து சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப்பின் தலைமையில் நேற்று (06) இடம்பெற்றது .

இந்த கட்டடத்தில், பொதுமக்கள் சந்திப்பு நாட்களில் கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் போன்றோர்களை ஒரே நாளில் சந்தித்து, தமது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியுமென, மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.அஜ்வாத் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X