2025 ஜூலை 31, வியாழக்கிழமை

குச்சவெளியில் வீட்டு வசதியின்றி 1,216 குடும்பங்கள்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 1,216 குடும்பங்கள்; வீட்டு வசதியின்றி உள்ளதாக அப்பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த வருடம் இப்பிரிவுக்கு 126 வீடுகள் கட்டுவதற்கான நிதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு, அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிலிருந்து திரும்பிய 292 குடும்பங்கள் வீட்டு வசதியின்றி உள்ளன. இக்குடும்பங்களில் 46 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு வீடுகளைக் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 924 குடும்பங்கள் வீட்டு வசதியின்றி உள்ளன. இக்குடும்பங்களில் 80 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு வீடுகளைக் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக வீடுகளைக் கட்டுவதற்காக கிடைக்கும் நிதியிலேயே ஏனைய குடும்பங்களைத் தெரிவுசெய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .