Thipaan / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், எம்.முபாரக்
கந்தளாய் குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளையின் தந்தையான ஏ.எம்.நஜீப் (44 வயது) என்பவர் காட்டு யானை தாக்கி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், கந்தளாய்க் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற போது காட்டு யானைகள் இவரை சூழ்ந்து தாக்கியதாகவும், இவர் படுகாயமுற்ற நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றிரவு திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago