Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 02 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
கடந்த 30 வருடகால யுத்த சூழ்நிலையின்போது, தங்களின் குடும்ப அங்கத்தவர்களை இழந்தமைக்கான எந்தவித அத்தாட்சியும் பெறாமல் 37 குடும்பங்கள் திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணற்சேனைக் கிராமத்தில் இருப்பதாக மூதூர் பிரஜைகள் குழுத் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கள் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கிராமத்தில் தாய், தந்தையரை இழந்த 12 பிள்ளைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த யுத்த சூழ்நிலையின்போது, மணற்சேனைக் கிராமத்தில் தங்களின் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்களுடனான சந்திப்பு, மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் விவேகானந்தா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது தாய், தந்தையரை இழந்த 12 பி;ள்ளைகளுக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.
கடந்த யுத்த சூழ்நிலையின்போது, தங்களின் பிள்ளைகளையும் கணவன்மார்களையும் இழந்த பலர் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்ட சிலரே பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்துள்ளார்கள். சிலர் இதனைச் செய்யாமல் உள்ளனர். இவ்வாறு பொலிஸ் முறைப்பாடு செய்தால், குடும்ப அங்கத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணையின் மூலம் கண்டறிய முடியும்.
மேலும், இவற்றுக்கான ஏற்பாடுகளை கிராம அலுவலர்கள் ஊடாக செய்யும்போது, எதிர்காலத்தில் நிவாரண உதவிகளையும் அவர்கள் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .