2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

காணிகளிலிருந்து வெளியேறுமாறு கடற்படையினரிடம் கோரிக்கை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தின் உப்பாறு கிராமத்திலுள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு, அங்கு தங்கியிருக்கும் கடற்படையினரிடம், காணி உரிமையாளர்கள், நேற்றுப் புதன்கிழமை (10) கோரியுள்ளனர்.

யுத்தம் காரணமாக, குறித்த கிராமத்தில் வசித்த தாம், தமது காணி மற்றும் உடமைகளைக் கைவிட்டு 1990ம்ஆண்டில் இடம்பெயர்ந்ததாகவும், அதன்பின்னர், அங்கிருந்த தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் கடற்படையினர் தமது பாதுகாப்பு முகாமை நிறுவினர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

அம்முகாம்கள் இன்னும் மாற்றப்படவில்லை. இது தொடர்பாக ஆளுநர் மற்றும்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உட்பட  அரசியல் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் தாம்கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றய தினம் குறித்த கடற்படை முகாம் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்த மக்கள், தமது ஆதாரங்களை காண்பித்து, தமது காணிகளில் தாம் மீளக்குடியமர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட கடற்படை அதிகாரிகள், தாம் இம்முகாமை மாற்றவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மூலம் கடிதம் கொண்டு வந்தால், தற்காலிகமாக மாற்றுக்காணி தரமுடியும் எனவும் தெரிவித்ததாக படையினரைச் சந்தித்து திரும்பிய காணி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீண்டகாலமாக பூர்வீகமாக வசித்த இந்த காணிகளில், தாம் மீளக்குடியமரவும் தமது காணிகளில் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .