Niroshini / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
தோப்பூர், செல்வநகர் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1,049 ஏக்கர் காணிப் பிரச்சினை சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறி ஜனாதிபதி செயலகத்திலிருந்து பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அக்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எம்.அலி தெரிவித்தார்.
இது தொடர்பான பதில் கடிதம் தோப்பூர் செல்வநகர் மஸ்ஜிதுன் ஹுதா ஜும்மா பள்ளிவாசலுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மேற்படி காணிப் பிரச்சினை சம்பந்தமாக தாம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இக்காணி நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ்.குணவர்த்தனவுக்கு இக்கடிதத்தின் பிரதியொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தோப்பூர், செல்வநகர் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1,049 ஏக்கர் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களமும் சேருவில பெரிய விகாரையும் சுவிகரிப்பதற்கான முயற்சிகளை ஒரு சில வருடங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி காணி சுவிகரிப்புக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா பிரதேசத்துக்கு வருகை தந்தபோது, தோப்பூரிலிருந்து சென்ற குழுவினர் இக்காணிப் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதியிடம் கடிதமொன்றை வழங்கியிருந்தனர்.
இந்நிலையிலேயே, இது தொடர்பான பதில் கடிதம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது' என்றார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026