Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
தோப்பூர், செல்வநகர் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் காணியை சேருவில விகாரைக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் சுவீகரிப்பதற்கு சூட்சுமமான வேலைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இதனை தடுப்பதற்காக காணி உரிமையாளர்களுக்கான கூட்டம் செல்வ நகர் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த காணி உரிமையாளர் ஒருவர், 'செல்வநகர் பிரதேசத்தில் நாம் 70 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றோம். எமது பரம்பரை குடியிருப்பு காணிகளையும் நெற் காணிகளை சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த காணியை நாம் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க இடமளிக்கக்கூடாது. நீதிமன்றம் சென்றாவது எமது காணிகளை மீட்டெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.இதற்கு காணி உரிமையாளர்களினது ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அத்தோடு நாம் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளிடம் காணிப் பிரச்சினை சம்பந்தமான ஆவணங்களை வழங்கி குடியிருப்பு காணிகளையும் நெற்காணிகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' தெரிவித்தார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026