2025 மே 22, வியாழக்கிழமை

கிண்ணியாவில் சந்திப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

துருக்கி நாட்டு உள்நாட்டு அமைச்சின் தென்னாசிய, பசுபிக் நாட்டு விவகாரங்களுக்கான ஆலோகர் சுக்று ஷெடின் மற்றும் சமூக சேவைகள் விவகார பணிப்பாளர் இப்ராஹீம் காா்லோ ஆகியோரை கிண்ணியா மஜ்லிஸ்  அஸ் சூரா சபையினர் வெள்ளிக்கிழமை (29) கிண்ணியாவில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, இணைந்த சகோதர நகரத் திட்டம், முதலீட்டு முயற்சிகள், நவீன மீன்பிடித் துறைக்கு உதவுதல், கற்கை நெறிகளுக்கான கல்லூரிகளை ஆரம்பித்தல் போன்ற பல்வேறு முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டன.

குறித்த விடயங்கள் தொடர்பில் செயற்றிட்ட அறிக்கைகள் தாயாரிக்கப் பட்டு துருக்கி தூதரகத்தின் ஊடாக துருக்கி அரசுக்கு அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கிண்ணியா மக்கள் துருக்கி தொப்பி அணிந்தது பற்றியும் உறவுகள் பற்றியும் பிரஸ்த்தாபிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் சூரா சபையின் சார்பாக தலைவர் எம்.ஏ.ஹிதாயத்துல்லாஹ், பிரதித் தலைவர் ஏ.ஆர்.எம்.பரீட், செயலாளர் எம்.எஸ்.நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .