2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கிண்ணியாவில் 3 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
கடந்த ஒருவார காலத்துக்குள் திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில் மூன்று டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் கிண்ணியா  வைத்திய அதிகாரி எச்.எம்.சமீம் கேட்;டுக்கொண்டுள்ளார்.

கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாலிந்துறைக் கிராம அலுவலர் பிரிவில் 21 வயதுடைய ஒருவரும் இடிமன் பிரதேசத்தில் 23 வயதுடைய ஒருவரும் பெரியாற்றுமுனைப் பிரதேசத்தில் 14 வயதுச்; சிறுவனும்  டெங்கு நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (17) விடுத்துள்ள அறிக்கையில், 'இந்த வருட ஆரம்பத்தில் டெங்குக் காய்ச்சலினால் எவரும் பாதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் இக்காலப்பகுதியில் நிலவிய அதிகரித்த வெப்ப நிலையாகும். ஆனால், கடந்த வாரம் முதல் பெய்கின்ற மழையால் மீண்டும் டெங்கு நுளம்புகள் உருவாகியுள்ளமை இந்த நோயாளர்கள் இனங்காணப்பட்டதன் ஊடாக தெரியவந்துள்ளது' என்றார்.  

டெங்கு நோய் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கையாக துண்டுப்பிரசுரத்தின் மூலம் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X