2025 மே 19, திங்கட்கிழமை

கைப்பையைக் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பெண்

Thipaan   / 2016 ஜூலை 25 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் 46, 500 ரூபாய் பணம் இருந்த கைப்பையை, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்து, ஒப்படைத்துள்ளார் என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

 

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணினுடைய 46, 500 ரூபாய் பணம் இருந்த கைப்பை, இன்று திங்கட்கிழமை காலை

11. 00 மணியளவில் சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போயிருந்தது.

இதனைக் கண்டெடுத்த சேருநுவர பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த, கே.டீ.கே.ரம்யலதா என்ற பெண் கண்டெடுத்துள்ளார்.

திருகோணமலை, சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போன, பணப்பையை குறித்த பெண், சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.வசந்த குமாரவின் முன்னிலையில், உரிய பெண்ணிடம் ஒப்படைத்ததாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X