Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.எம்.எம்.முஜாஹித், வடிவேல் சக்திவேல்,ஏ.எஸ்.எம்.யாசீம்,வா.கிருஸ்ணா,பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னிலையில் முதலமைச்சர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம்.மன்சூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் திகாமடுல்ல மாவட்டத்தில் அடுத்த நிலையிலிருந்த சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.எல்.எம்.மாஹிர் புதிய உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய ஐ.எல்.எம்.மாஹிர், 'தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு பாடுபடவும் இதன் மூலம் மக்களும் உச்ச நன்மையை அடைவதற்கும் அர்ப்பணிப்புடன்; செயற்படவுள்ளேன். மேலும், கிழக்கு மாகாணசபையின் சிறந்த திட்டங்களுக்கு பக்கபலமாக இருந்து அதன் மூலம் மூவின சமூகங்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் செயற்படவுள்ளேன்'; என்றார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026