2025 ஜூலை 31, வியாழக்கிழமை

குமாரபுரம் மக்களை சந்தித்தார் தண்டாயுதபாணி

Thipaan   / 2016 ஜூலை 04 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை கிளிவெட்டியிலுள்ள குமாரபுரம் கிராமத்தில்  நடந்த படுகொலை தொடர்பாக நீதிமன்றில் சாட்சியமளித்த  பாதிக்கப்பட்ட மக்களை, கடந்த சனிக்கிழமை (02) நேரடியாகச் சந்தித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, அவர்களது நிலமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

தாம், வழக்கு நடைபெறும் தினங்களில், மூதூர் கிளிவெட்டியிலிருந்து, அநுராதபுரத்துக்கு நாளந்தம் சென்று வருவதாகவும் அதனால் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாகவும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். 

கடந்தவாரம் முழமையாக இந்த விசரணைகள் அநுராதபுரம் மேல்நீதிமன்றில் நடைபெற்றன.

தற்சமயம் இந்த வழக்கு நடவடிக்கைளில் தமக்கு அகம் அமைப்பு சில அனுசரணைகளை வழங்கி  தம்முடன் ஆதரவாக இருந்து வருவதாகத் தெரிவித்த மக்கள், மேலும் ஏழுபேருக்கு விசாரணைக்கான அழைப்பாணைகள் பொலிஸார் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று திங்கள்கிழமை வழக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏலவே, 20பேருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தபோதும் அதில் நால்வர் இயற்கை மரணம் எய்தியுள்ளனர். ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் 14பேர்வரை இதுவரை சாட்சியமளித்துள்ளோம். மேலும் பலருக்கு மூதூர் பொலிஸாரால் புதிதாக அழைப்பாணைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின்  திருகோணமலை மாவட்டக் கிளை சார்பாக இந்த வழக்குச்செலவுக்காக ஒரு தொகை நிதியையும் அமைச்சர் வழங்கிவைத்தார். இவருடன், மூதூர் பிரதேசபையின்  முன்னாள் உறுப்பினர் தமிழ்ச்செல்வனும் உடன் சென்றிருந்தார். அநுராதபுரத்தில் வழக்கு நடைபெறுவதனால் தினமும் போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிட்ட பல செலவுகள் உள்ளமையையும் சுட்டிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .