Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 31 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டுவரும் சிறுபான்மை சமூகத்துக்கு உறுதியாக நீதி வழங்கப்படும் என்ற தங்களின் நிலப்பாட்டை உறுதி செய்ய, கிளிவெட்டி, குமாரபுரம் வழக்கின் தீர்ப்பை மேன்முறையீட்டுக்கு உள்ளாக்குங்கள் என, பாதிக்கப்பட்ட குமாரபுரம் மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற மூதூர் நீதிமன்றக் கட்டத்தொகுதி திறப்புவிழாவுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவென, வழங்கப்பட்ட மகஜரிலேயே, இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1996ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி குமாரபுரம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களாகிய நாங்கள், தங்களுக்குத் தரும் கோரிக்கை என்னவெனில், மேற்படி குமாரபுரத்தில் நடந்த படுகொலைகள் யாவரும் அறிந்த உண்மை நிகழ்வாகும். இவ்வழக்கில் சமப்பந்தப்பட்ட, இராணுவ கோப்பரல்கள் ஆறுபேரையும் குற்றமற்றவர்கள் என விடுவிப்பதாக, கடந்த 27.07.2016 அன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள குமாரபுரம் கிராமத்தில் நிகழ்ந்த இந்தப் படுகொலையை அருகில் அமைந்திருந்த முகாமிலிருந்த இராணுவத்தினர் புரிந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 36 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள் மற்றும் 13 குழந்தைகள் அடங்கியிருந்தனர் என்பது முக்கியமான விடயமாகும்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில், ஒன்பது மாத நிறை கர்ப்பிணி ஒருவர் உள்ளடங்கியிருந்ததுடன், 16 வயதான மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு இருந்தார்.
இச்சம்பவத்தில் பாலியில் பலாத்காரம் செய்யப்பட்ட பிள்ளையின் உடல், சம்பவத்தின் அடுத்த நாள் பாழடைந்த கட்டடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களும் காயப்பட்டவர்களும் உடனடியாக, மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். பின்னர் நடந்த விசாரணைகளில் ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டிருந்தது
இதுதொடர்பான வழக்கு விசாரணைகள், மூதூர் நீதிமன்றிலும் திருகோணமலை மேல் நீதிமன்றிலும் 17 முறை நடைபெற்றன. பின்னர், எதிராளிகளின் பாதுகாப்புக்கருதி சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கிணங்க, அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதற்படி நடைபெற்ற விசாரணைகளில், 2006 லிருந்து 2016 வரை, 108 நேரடி சாட்சிகள் மன்றில் குற்றவாளிகளை அடையாளங்காட்டி சாட்சியங்களை வழங்கியிருந்தனர். எனினும், இடையில் வழக்கு தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் 20 வருடங்கள் கழித்து கடந்த 26.05.2016 அன்று, வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆனாலும், நம்பிக்கை மங்கியிருந்த வேளையில் நல்லாட்சிக் காலத்தில் மீள நம்பிக்கை ஏற்பட்டது. இவ்வாறு கொடூரமாகப் புரியப்பட்ட படுகொலைகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் முன்னர் தெளிவாக விவரித்திருந்தன.
நாட்டின் நலலாட்சிக்காக பலரும் உழைத்துவரும் நிலையில், இனப்பிரச்சனைக்கு ஓர் அமைதியான தீர்வைக்காண முயற்சித்துவரும் நிலையில், இதுபோன்ற செயற்பாடு, நடைபெறும் தீர்வையும் நல்ல முறையில் கொண்டுவருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை கொண்டு வர மீள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இது ஒரு பக்கச்சார்பான நடவடிக்கையாகவே நாம் கருதகின்றோம்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட எமக்கான நீதியைப்பெற்றுத்தர மேன்முறையீட செய்யப்பட வேண்டும். இதனை சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுக்க வேண்டும். மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பீடு, மறுவாழ்வுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நத நல்லாட்சியை நீதி நிலைநாட்ட பாடுபடும் நீங்கள் இதனை செய்ய வேண்டும் என விநயமாக வேண்டுகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
1 hours ago