2026 மார்ச் 23, திங்கட்கிழமை

காய்ச்சலினால் சிறுமி பலி

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்

திருகோணமலை, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய  சிறுமி, நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு 7 மணியளவில் காய்ச்சல் காரணமாக கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கோரமங்கடவெல, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.உதேசிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம், தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை உயரதிகாரி தெரிவித்தார்.

இம்மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .