Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்,எஸ்.சசிக்குமார்
தமிழ் மக்கள் மீது புரிந்ததாகக் கூறப்படும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறையினூடாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தியும் எந்த வடிவிலான உள்ளகப் பொறிமுறை மீதும் நம்பிக்கை இல்லையென்பதை வெளிப்படுத்தியும் இதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் கையெழுத்துப் போராட்டத்தை சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு அமைப்பு முன்னெடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் திங்கட்கிழமையிலிருந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருகோணமலை நகரிலுள்ள சிவன் கோவிலுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை 03 மணிக்கு கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக இந்தக் குழுவின் கிழக்கு ஊடக இணைப்பாளர் இரா.ஸ்ரீஞானேஸ்வரன் தெரிவித்தார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026