2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கேரளா கஞ்சாவை கொண்டு வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 மார்ச் 11 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

முல்லைதீவிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் கேரளா கஞ்சா 9 1/2 கிலோகிராமைக் கொண்டு வந்த வேளை கை செய்யப்பட்ட இளைஞனை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத், நேற்று (10) உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திரைகோணமலை, இலிங்கநகர் பகுதியைச்சேர்ந்த ஜே.ரொபின்ஷன் (30 வயது) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கேரளா கஞ்சாவை பஸ்ஸில் கொண்டு வருவதாக, உப்புவெளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கன்னியாப் பட்டியடியில் சோதனைகளை மேற்கொண்ட போதே, இவரிடமிருந்து கேரளா கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .