Kogilavani / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி, ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர், கிண்ணியாவிருந்து கொழும்புக்கான குளிரூட்டப்பட்ட பஸ் சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இலங்கை போக்குவரத்துச் சபை தவிசாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பஸ் சேவை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக இரண்டு பஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. மூதூரிலிருந்து இரவு 10.45க்கு ஆரம்பமான இந்த பஸ் சேவை கிண்ணியா ஊடாக அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பை அடைந்தது.
அதேபோல இரவு 11.00 மணிக்கு கொழும்பிலிருந்து ஆரம்பமான இந்த பஸ் சேவை அதகாலை 4.00 மணிக்கு கிண்ணியா ஊடாக மூதூரை அடைந்தது. இந்த பஸ் சேவையை பலர் எதிர்பார்ப்பதால் முன் கூட்டி பதிவு செய்வோருக்கே ஆசனம் கிடைத்தது.
இந்நிலையில் இந்த பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக தவிசாளர் உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் கிண்ணியா, மூதூர் டிப்போ முகாமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago